February 16, 2018
தண்டோரா குழு
சற்குணம் இயக்கத்தில் வெளியான களவானி படித்தில் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. அதன்பின் மெரினா,மூடர் கூடம், மதயானைக் கூட்டம்,கலகலப்பு,யாமிருக்க பயமேன் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில்,“குளிர் 100டிகிரி” படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிக்க உள்ள 90ML” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது.இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ஓவியா லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் ஓவியா ஆர்மியினர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும், நடிப்பு என்று வந்துவிட்டால் எல்லவிதமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்க வேண்டும் என்றும் ஓவியாவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.