February 16, 2018
தண்டோரா குழு
காவிரி வழக்கில் தமிழக அரசு மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்த தீர்ப்பில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி.க்கு பதிலாக 177.25 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி வழக்கு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே காவிரியில் நீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.