February 16, 2018
தண்டோரா குழு
கோவையை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ ஆலய ஜன்னல் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.
கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள சிவாஜி காலனி சிம்சன் நகர் பகுதியில் சி.எஸ்.ஐ தூய மீட்பர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தில் தினந்தோறும் ஜெப கூட்டங்கள், ஆராதனைகள், உபவாச கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆலயத்தில் ஊழியராக வேலை பார்க்கும் பிரபாகரன் வழக்கும்போல் நேற்று(பிப் 15) இரவு 9 மணியளவில் ஆலய பணிகளை முடித்து கொண்டு பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 7.30மணியளவில் ஆலயத்தை தூய்மைபடுத்த பிரபாகரன் திரும்பி வந்து பார்த்தபோது, லயத்தின் முன்பக்க ஜன்னல் இரும்பு பைப்பால் உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த ஜன்னல் 6 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் உள்ள 10 எம்.எம் அளவு கொண்டதாகும்.
இதனை பார்த்த பிரபாகரன் திருச்சபை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடைந்த ஜன்னல்கள் மற்றும் இரும்பு பைப்பை எடுத்து கொண்டு சென்றனர். மேலும்,இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.