February 16, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள எஸ் ஐ எச் எஸ் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூறி அப்பகுதி மக்கள்,மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று(பிப் 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த எஸ் ஐ எச் எஸ் காலனி பகுதியில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாக்கடை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.
மேலும்,அப்பகுதியில் சாலை மற்றும் தெரு விளக்கு என எந்த வசதியும் இல்லாதது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்கு எந்த வசதியும் செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து வசதிகளும் விரைவில் செய்து தரப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.