February 16, 2018
தண்டோரா குழு
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவிலிருந்து 14.75 டிஎம்சி நீரை குறைத்து தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.இந்த உத்தரவினால் தமிழகத்திற்கான காவிரி நீரின் பங்கு 404.25 டி.எம்.சியாக குறைந்தது.
மேலும்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கர்நாடகத்துக்கான நீரின் பங்கு 284.75 டிஎம்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் அளவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.