February 15, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பான 24 வீடியோ அடங்கிய பென்டிரைவ் விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் சமர்பித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் ஆஜரானார். அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திகேயனின் வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறுகையில்,
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வேறுபட்ட கருத்துகள் கூறியவர்களின் வீடியோ அடங்கிய பென்டிரைவை விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம். பொன்னையன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்டோர் பேசிய 24 வீடியோக்கள் பென் டிரைவில் உள்ளன. மேலும், வீடியோவில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்க ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்ற போது கார்த்திகேயன் பார்த்ததாக கூறப்படுகிறது.