February 15, 2018
தண்டோரா குழு
தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் ஷூமா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா கடந்த 2009ம் ஆண்டு பதவியேற்றார்.இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததையடுத்து, அவர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது.இந்நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி வலியுறுத்தியது.இதனையடுத்து ஜேக்கப் ஷூமா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும்,கடந்த 2008ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் தபோம்பெகியும் இதே போல ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.