February 14, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவிக்க போவதாகவும், ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தீவிர அரசியலில் ஈடுபட்ட பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என கமல்ஹாசன் கூறியதாக கூறப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு வருத்ததை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரசியலுக்கு வந்தாலும் திரைப்படங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன் என கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். இதன் மூலம் அவர் சினிமாவை விட்டு செல்கிறார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், முழுநேர அரசியலுக்கு வந்த பிறகுதான் படங்களில் நடிப்பதா? இல்லையா? என்பது குறித்து சொல்ல முடியும்.தற்போது 3 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். அதில் இரண்டு படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. இன்னொரு படம் இனிமேல் தான் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. எனவே சினிமாவை விட்டு செல்வது குறித்து இப்போது பேச முடியாது எனக் கூறியுள்ளார்.