February 14, 2018
தண்டோரா குழு
தமிழகம் பெரியாழ்வார் மண் என்ற தமிழிசையின் கருத்து வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,
இந்து கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும்.கோவில் சொத்துகள் குறித்த தகவல்களை போர்க்கால அடிப்படையில் அளிக்க வேண்டும்.50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கோவில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறி உள்ளன.
திராவிடர் கழகத்தினரும் திமுகவினரும் பல இடங்களில் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துப் பள்ளிகள், கடைகள் கட்டியுள்ளனர். அதுபற்றிய விவரங்களை நான் வெளியிட உள்ளேன். என்றார்.
மேலும், தமிழகம் பெரியாழ்வார் மண் என்ற தமிழிசையின் கருத்து வரவேற்கத்தக்கது என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.