February 14, 2018
தண்டோரா குழு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு கசிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை, ஊழியர்கள் சுத்தம் செய்ய முயற்சி செய்த போது, விஷவாயு தாக்கியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.