February 14, 2018
தண்டோரா குழு
மத்திய அரசின் மேரா ஆஸ்பிடல் திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் மொபைல் எண்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளிடம் அரசு மருத்துவமனையின் மேம்பாடு குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய உள்ளது.
மத்திய அரசின் மேரா ஆஸ்பிடல் திட்டத்தை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நோயாளிகள் மருத்துவமனை குறித்த புகார்களை தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாடுகள், சேவையின் தரம் குறித்து அரசு நோயாளிகளிடம் கேட்டு ஆய்வு செய்ய உள்ளது.இதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தகவல்கள் அனைத்தும் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நோயாளிகளின் பெயர் விவரங்களுடன் நோயாளிகளின் சரியான மொபைல் எண் கேட்டு பெற வேண்டும் எனவும் தெரிவிக்கபப்ட்டு உள்ளது. இதனால் இன்று முதல் புறநோயாளிகள் சீட்டு பெற வரும் நோயாளிகளிடம் அவர்களின் மொபைல் என பெறப்பட உள்ளது.