February 14, 2018
தண்டோரா குழு
கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மெட்ரோ பாலிஷ் & சேன்ஜ் பவுண்டேசன் இணைந்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு 500 பெட்ஷீட் மற்றும் 70 குப்பை தொட்டிகள் வழங்கினர்.
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இவ்விழாவில் கோவையில் உள்ள முண்ணனி கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மாணவ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும்,கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்து,மருத்துவமனை வளாகங்களில் மரங்கள் நட்டனர். மாணவ மாணவிகளுக்கு காதலர் தினம் என்பது அருகில் இருக்கும் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்வுகள் நடந்தது.
இந்நிகழ்ச்சியில்,சேன்ஜ அமைப்பு நிர்வாகி தஸ்லீமா நஸ்ரின் கலந்து கொண்டு அன்பு என்பது அனைவர் மீதும் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். ரோட்டரி கிளப் தரூண் ஷா மற்றும் அரசு மருத்துவமனை டீன் அசோக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.