• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறையில் குழந்தையை கடித்து கொன்ற சிறுத்தை சிக்கியது!

February 14, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை எஸ்டேட் பகுதியில் கடந்த 8ஆம் தேதி செய்துல் என்ற குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது,அங்கு வந்த  சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்துச் சென்றது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று பார்த்த போது குழந்தை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது.

இதையடுத்து ஆட்கொல்லியாக மாறிப் போன சிறுத்தையைப் பிடிக்க நடுமலை எஸ்டேட், சிஎஸ்ஐ சர்ச் வளாகம், பொதுப்பணித்துறை குடியிருப்பு மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் வனத்துறை சார்பில் கூண்டுகள்  வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று அதிகாலை நடுமலை எஸ்டேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதுமட்டுமின்றி குழந்தை கொல்லப்பட்ட இடத்தின் அருகிலேயே சிறுத்தை சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க