February 13, 2018
தண்டோரா குழு
குன்றத்தூரில் இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 10-ம் தேதி சென்னை அருகிலுள்ள குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை என்ற பகுதியில் சாலையில் ஜெயஸ்ரீ என்பவர்நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கரவாகனத்தில் வந்த நபர்கள் அவரின் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதில் நிலை தடுமாறிய ஜெயஸ்ரீ கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, இது குறித்து விசாரணை நடத்திய போலீசார்பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சிவா (வயது 19) மற்றும் அவரது நண்பர் சாலமன் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவாவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சிவாவின் நண்பர் சாலமனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவா மீது இது போன்று பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.