February 13, 2018
தண்டோரா குழு
கோவையில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் போனஸ் மறுப்பதை கண்டித்து இன்று(பிப் 13) ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வுதியர் சங்கம் சார்பில், பணிப்பிரிவை காரணம் காட்டி A &B பிரிவு ஓய்வூதியர்களுக்கு போனஸ் மறுப்பதை கண்டித்தும், உடனடியாக அனைவருக்கும் போனஸ் வழங்க கோரியும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் நிலுவையில் உள்ள 21 மாத ஊதிய , ஓய்வூதிய திருத்த நிலுவைத்தொகையினை வழங்கிட கோரி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும்,இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அரங்கநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் மதன் , மாவட்ட துணை தலைவர் சந்திரன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.