February 12, 2018
தண்டோரா குழு
ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின் இணையத்தில் டிரெண்டாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரஷாஷ் வாரியர்.
’ஒரு அதார் லவ்’ என்ற படத்தில் இடபெற்றுள்ள மானிக்க மலராயா பூவி என்ற பாடலில் நடித்துள்ள பிரியா பிரஷாஷ் என்ற நடிகை அவரது குறும்புத்தனமான முகபாவனைகள் மூலம் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறார். பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளனர். இந்த பாடல் வைரல் ஆனதற்கு மிக முக்கிய காரணமே பிரியா பிரஷாஷ் வாரியர் தான்.
ப்ரியா பிரகாஷ் வாரியார் தற்போது உலக அளவில் செம பேமஸ் ஆகி விட்டார். இதனால் ட்விட்டர், பேஸ்புக், யூ ட்யூப் என அனைத்து சமுக வலைத்தளங்களிலும் இவர் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்.
இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால் அவரது ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர். இதனால் ஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். இதனால் பிரியா குஷியாக உள்ளார்.