• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வெள்ளிங்கிரியில் மலையேறும் பக்தர்களை கண்காணிக்க சிறப்பு குழு

February 12, 2018 தண்டோரா குழு

கோவை வெள்ளிங்கிரியில் சிவாரத்திரையை முன்னிட்டு, மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. இந்த மலை பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்த மலை  பாதையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த வருடம் வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட பக்தர்களுக்கு கடந்த 6 ஆம் தேதி முதல் வனத் துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இந்நிலையில் நாளை(பிப் 13)சிவராத்திரி என்பதால் ஏராளமான mபக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.பக்தர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மலையேற்றத்தின் பொது பக்தர்கள் எளிதில் தீ பிடிக்க கூடிய பொருட்களையும் கொண்டு செல்ல கூடாது என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் வருவதும், பூண்டி சாலையில்  இரவு நேரத்தில் நடந்து கோயில்களுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க