February 12, 2018
தண்டோரா குழு
லஞ்ச புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடமிருந்து ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதி நடைபெற்றது. அப்போது, இம்மனு மீதான விசாரணையை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தி வைத்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக கணபதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, லஞ்ச புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.