February 12, 2018
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கள்ளிமடை பகுதியில் திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி 63 வது வட்டம், கள்ளிமடை பகுதிகளில் பல மாதங்களாக அப்பகுதியில் சாலைகள் படுமோசமாக உள்ளதையும், சாக்கடைகள் தூர்வாரப்படாமலும், குப்பைகள் அள்ளப்படாமலும், பொது கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் பராமரிக்கப்படுவதையும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயரதிகாரிகளை நேரில் வரவழைத்து அவற்றை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்களிடத்திலும் குறைகளை கேட்டறிந்தவர், பொதுமக்களின் பிரச்சினைகளை சரி செய்யாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.