• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பக்கோடாவிற்கு போட்டியாக பாஜக வினர் அல்வா போராட்டம் !

February 12, 2018 தண்டோரா குழு

பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகோடா விற்ற புதுவை முதல்வருக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் அல்வா கடை திறந்து விற்பனை செய்து போராட்டம் நடத்தினர்.

இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலை வாய்ப்புதானே என பாஜக தலைவர் அமித்ஷா கூறினார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் மோடி அரசின் ஏமாற்று வேலை எனக் கூறியும் பிரதமர் மோடியைக் கண்டித்து, புதுவை முதல்வர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் கடந்த வாரம் பக்கோடா விற்கும் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, இளைஞர் காங்கிரஸார் பட்டம் பெற்ற உடையணிந்து, அடுப்பு மூட்டி பக்கோடா, பஜ்ஜி ஆகியவற்றை சுட்டு மோடி பக்கோடா, பஜ்ஜி எனக் கூவிக் கூவி விற்பனை செய்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராமலும் பல்வேறு வரி உயர்தப்பட்டுள்ளதையும் கண்டித்து பாஜக சார்பில்  நேரு சாலையில் நாராயணசாமி என்ற பெயரில் அல்வா கடை திறந்து பாஜகவினர் விற்பனை செய்து வருகின்றனர். இதில், புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்க