February 12, 2018
தண்டோரா குழு
சென்னையில் ஜனவரி 2019ல் உலக முதலீட்டளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு செம்டம்பரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதன் பின் இந்த ஆண்டு உலக முதலீட்டளர்கள் மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின் அடுத்த கட்டமாக இன்று, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2019 ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநாட்டில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை முன்னிட்டு உலகில் உள்ள பல முன்னணி நிறுவங்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.