• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோலி செய்த செயலால் குஷியான தென் ஆப்ரிக்க ரசிகர்கள்!

February 12, 2018 tamilsamayam.com

ஜோகானஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், கோவக்கார கோலி தனது அன்பான மறுபக்கத்தை காட்டி ரசிகர்களின் மனதை வென்றார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்து முதல் முறையாக வரலாறு படைத்தது.

இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி ஜோகானஸ்பர்க்கில் நடந்தது. இதில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இடுப்பில் காயம்:

இப்போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர் மார்னே மார்கல் வீசிய போட்டியின் 21 ஓவரின் மூன்றாவது பந்தை இந்திய கேப்டன் கோலி எதிர்கொண்டார். அப்போது பந்து கோலியின் பேட்டில் பட்டு எகிறியது.

கோலியின் மறுபக்கம்:
இதை மார்கல் கேட்ச் பிடிக்க முயற்சித்தார். அதில் பந்தை பாய்ந்து பிடிக்க முயற்சித்த போது மார்கலுக்கு இடுப்பு பகுதியில் பலமாக காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய மார்கல் எழுந்து நின்ற போது, ஆக்ரோஷ கோலி, அவரை அக்கரையுடன் விசாரித்தார்.

ரசிகர்கள் மனதை கவர்ந்தது:
கோலியின் இந்த செயல் தென் ஆப்ரிக்க ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்த வீடியோவை கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க