February 10, 2018
தண்டோரா குழு
சென்னையில்மட்டன் பிரியாணி எனக் கூறி பூனைக்கறி விற்பதாக வந்த புகாரை அடுத்து தனிப்படை அமைக்கபப்ட்டுள்ளது.
சென்னையில் காக்க பிரியாணி, நாய் பிரியாணி என அடிக்கடி புகார் எழுவதால் அசைவ பிரியர்கள் பலர் சாலையோர கடைகளில் சாப்பிடவும், சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிகளை வாங்கவும் பெரும் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் அசைவ பிரியர்களை மீண்டும் பீதியடைய செய்யும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் ! சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவேசென்னையில் பல இடங்களில் பூனைகள் நடமாட்டமே இல்லாமல் போனது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள் திடீரென மாயமாகின.இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் மாயமானது சந்தேகத்தை எழுப்பியது.
இதற்கிடையில், சென்னை செங்குன்றம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி பரிமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த ஹோட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் போல் சென்ற போலீசார் பூனை கரி சப்ளை செய்ய வந்த கும்பலை பொறி வைத்து பிடித்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பூனை சப்ளை செய்த கும்பல் செங்குன்றத்தில் தங்கியிருக்கும் நாடோடிகள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்த போலீசார் சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த 12 பூனைகள் பறிமுதல் செய்தனர்.ஆட்டுக்கறி விலை கிலோ 600 ரூபாய்க்குவிற்பதால் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் பூனைக்கறியை வாங்க ஹோட்டல்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சாலையோர சாப்பாட்டு கடைகள் மட்டுமின்றி பெரிய பெரிய ஹோட்டல்களிலும் பூனைக்கறியை கலந்து மட்டன் பிரியாணி தயாரிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னையில் பூனைக்கறி விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பூனைக்கறி விற்பவர், அதை வாங்கும் கடைக்காரர் உள்ளிட்டோரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஹோட்டல்களில் சாப்பிடுவது ஆட்டுக்கறியா? பூனை கறியா? பிரியாணி வாங்கி சாப்பிடும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.