• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சன்னிலியோனின் தமிழ் படத்திற்கு எதிர்ப்பு கிளப்பியது – காவல் நிலையத்தில் புகார்

February 10, 2018 தண்டோரா குழு

கனடா நாட்டை சேர்ந்த  சன்னிலியோன் ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்.தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தற்போது இந்தியப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் ‘வீரமாதேவி’ சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன்.இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன். இந்தப் படத்தின் மூலம் சன்னி லியோன் மீதிருக்கும் ஆபாசப் பட நடிகை என்கிற பிம்பம் நிச்சயம் மாறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில், சன்னி லியோன் ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க சன்னி லியோனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இனோச் மோசஸ்நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில்,

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் இடத்தில் வீரமாதேவி என்ற படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். இணையதளத்தில் எளிதில் காணக் கிடைக்கும் சன்னி லியோன் நடித்த ஆபாச படங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது.அவர் நடிக்கும் வீரமாதேவி என்ற படம் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் என்று கூறப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடந்தால் அவரை பார்க்க அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள். எனவே, இந்தப் படப்பிடிப்பில் சன்னி லியோன் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்.” என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க