• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி அதிகாரி ஓட்டம் !

February 10, 2018 தண்டோரா குழு

ஜெ. தீபா வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த போலி நபர் காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் தப்பியோடியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வீடு சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் தான் வரித்துறை கூடுதல் ஆணையர் மிதேஷ்குமார் என்பவர் ஜெ.தீபா வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அதற்கான அடையாள அட்டை சோதனை செய்வதற்கான வாரண்ட் போன்ற ஆவணங்களையும் அவர் வைத்திருந்தார்.

மற்ற அதிகாரிகள் சோதனைக்கு 10 மணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து தீபா வீட்டில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற செய்தியாளர்களை அவர் சந்திக்க மறுத்தார். மேலும் வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் அவர் கைகளால் தடுத்தார். இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு  தீபா வீட்டுத் தரப்பில் இருந்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தியாகராயநகர் உதவி ஆணையர் செல்வன், காவல் ஆய்வாளர் சேகர், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் 6 ஆண் போலீசார் 4 பெண் போலீசார் ஆகியோர் தீபா வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டை வாரண்ட் போன்ற ஆவணங்களை வாங்கி சோதனை செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடீரென அவர் தீபா வீட்டின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து தப்பியோடினார்.

அவரை போலீசாரும் செய்தியாளர்களும் விரட்டிச் சென்றனர். உதவி ஆணையர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தும் தப்பிச் சென்ற போலி நபரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் அந்த நபர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை மற்றும் வாரண்ட் என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க