February 9, 2018
தண்டோரா குழு
பேட் மேன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் பெண்களுக்கான இலவச சானிடரி நேப்கின் வழங்கப்படுகிறது.
கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்களுக்கான குறைந்த விலை சானிடரி நாப்கின் தயாரித்து சாதித்தார். அவரது வாழ்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் அக்சய் குமாரின் பேட்மேன் திரைப்படம் உருவானது.பேட் மேன் சேலஞ்ச் எனும் பெயரில் பாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் சானிடரி நேப்கின்களைக் கைகளில் பிடித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால்,சமூக வலைதளங்களில் ஆண்களும், பெண்களும் நேப்கின்கள் பற்றி வெளிப்படையாக உரையாடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இப்படம் இன்று வெளியானது. பேட் மேன் திரைப்படம் வெளியாகியுள்ள சத்யம் திரையரங்கில் பெண்களுக்கான இலவச நேப்கின்கள் வழங்கப்படுகிறது. இதனால் சத்யம் திரையரங்கிற்கு பெண்கள் மத்தியில் பாராட்டு குவிகிறது.