• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர்

February 9, 2018 தண்டோரா குழு

கவிஞர் வைரமுத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் நேற்று(பிப் 8)உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சடகோப ராமானுஜ ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆண்டாள் கோவிலுக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சடகோப ராமானுஜ ஜீயர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

மேலும் படிக்க