மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை நாளைக்குள் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் செயல்பட்டு வந்தன.ஆயிரங்கால் மண்டபம் அருகே, வீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இருந்தன.இங்கு கடை எண், 75, 76 ல் ஏற்பட்ட தீ விபத்தால், வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது. பயங்கர தீ விபத்துக்கு காரணமான கடைகளை அகற்றக்கோரி, பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடைகளை அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இம்மனு விசாரணைக்கு வந்தது அப்போது, மீனாட்சி கோயில் வளாகத்தில் செயல்படும் 115 கடைகளை நாளை (பிப்.,9) நண்பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும். உரிமையாளர்கள், தங்களது பொருட்களை கோயில் நிர்வாகம் குறிப்பிடும் இடத்தில் வைக்க வேண்டும். அதனையும், 3 வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது