February 8, 2018
தண்டோரா குழு
சென்னை விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகை, புறப்பாடு, விமான அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த அறிவிப்பு பலகையிலிருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது.
மேலும்,காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு போடுவதால் தாமதம் ஏற்படுவதாக கூறி தமிழ், இந்தி நீக்கப்பட்டு ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படும் என்று விமான நிலைய இயக்குநா் தெரிவித்துள்ளார்.