February 7, 2018
தண்டோரா குழு
கோவையில் ரஜினி மக்கள் மன்றம் வழக்கறிஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது ரஜினிகாந்த் தன் மன்றத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அதன் ஒரு பகுதியாக முதன் முதலாக கோவையில் வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் வழக்களிஞர்கள் பிரிவு கோவை நீதிமன்ற வளாகத்தில் துவக்கப்பட்டு,வரும் வெள்ளிக்கிழமையன்று உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.
மேலும்,மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் சிறப்பு தன்மையுடன் செயல்படப் போவதாக இதன் உறுப்பினர்கள் கூறினர்.கடந்த 1993 ஆம் ஆண்டு ரஜினிக்கு அரசியல் பிரச்சனை வந்தபோதே தாங்கள் தான் தமிழகத்தில் முதன்முதலாக வழக்கறிஞர்கள் பிரிவு துவங்கியதாகவும், தற்போது ரஜினி முழு நேர அரசியல் களத்தில் இறங்குவதால் அவருக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தெரிவித்தனர்.