• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் – ஸ்டாலின் அறிவிப்பு

February 6, 2018 தண்டோரா குழு

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, வரும் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டனக் கூட்டங்கள் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், துரைமுருகன், டி.ஆர்.பாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவாலயத்தில் தொடங்கியது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.  இந்த கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு மற்றும் அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, போராட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்பார்கள் என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க