கோவையில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் மீதான ஜாமீன் மனு 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பல்கலைகழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் பிப் 3 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.அன்றைய தினம் இரவே இருவர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி் ஜான் மினோ முன்னிலையில் நடைபெற்றது.விசாரணையின் போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் பதில் மனு தாக்கல் செய்ய 8 ம் தேதி வரை அவகாசம் தேவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதால் , ஜாமீன் மனு மீதான விசாரணை 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என துணைவேந்தர் கணபதி தரப்பு வழக்கறிஞர் ஞானபாரதி தெரிவித்தார்.
மேலும்,இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி , பேராசிரியர் தர்மராஜ் ஆகியோருடன் தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், துணைவேந்தரின் மனைவி பெயர் இடம் பெறவில்லை எனவும் வழகறிஞர் ஞானபாரதி தெரிவித்தார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்