• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

152 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அபூர்வ சந்திரகிரகணம் பார்த்து ரசித்த மக்கள்

February 1, 2018 தண்டோரா குழு

கோவை வஉசி மைதானத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 152 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய அபூர்வ சந்திரகிரகணத்தை  டெலஸ்கோப் மூலம் மக்கள்அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர்.

நீல நிலா என்பது ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வருவதாகும். கடந்த ஒன்றாம் தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில் ஜனவரி மாதத்தில் நேற்று(ஜன 31) மீண்டும் பவுர்ணமி வந்துள்ளது.இந்த நீல நிலாவை  நூற்றுக்கணக்கான மக்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த டெலஸ்கோப் மூலம் பார்த்து ரசித்தனர்.

முழு சந்திர கிரகணம் நேற்று(ஜன 31) மாலை 6.15 மணியளவில் தொடங்கி 8.20 வரை தெரிந்தது. நிலா பூமிக்கு அருகில் வருவதால் 14 சதவிகிதம் பெரிதாகவும், 30 சதவிகித கூடுதல் பிரகாசத்துடன் தெரிந்தது. இந்த அபூர்வ சந்திர கிரகணத்தன்று பவுர்ணமி நாட்களை விட  நிலவு 14 சதவீதம் பெரியதாக தோன்றும். அதேபோல் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாகவும் நிலவு காட்சியளிக்கும்.
 

 

 

மேலும் படிக்க