• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை

February 1, 2018 தண்டோரா குழு

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என மத்திய நிதியமைச்சர் ஜெட்லி அறிவித்துள்ளார்.

2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார்.

தனிநபர் வருமானத்தில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனிநபருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் என்பதில் மாற்றம் இல்லை.ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.50 லட்சம் முதல் 1 கோடி ரூபாயிலான வருவாய்க்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்திற்கு 15 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு தொடரும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

மேலும், மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டு வரப்படும், வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8.27 கோடியாக அதிகரித்துள்ளது. 80 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்துகின்றனர். கறுப்பு பணத்தை ஒழிக்கும்அரசின் முயற்சிக்கு நல்ல பலன் அளித்துள்ளது. கூடுதலாக 90 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க