January 31, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3வது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். கரன்ஜ் இன்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த கரஞ்ச் நீர்மூழ்கி கப்பலின் சோதனை ஓட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் 6 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. டீசல்-எலக்ட்ரிக் மூலம் இயங்கும் இந்த கப்பல்கள் நீருக்கு அடியில் இருந்தும், நீர்ப்பரப்பில் இருந்தும் போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது கடற்படை தளபதி சுனில் லன்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.