January 30, 2018
தண்டோரா குழு
சமூகவலைத்தளங்களில் டப்மேஷ் வீடியோக்களை பதிவிட்டு பலரும் பிரபலமாகி வருகின்றனர். அதிலும் மிருளாளினி என்பவர் செம பேமஸ்.
இவருடைய எல்லா வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். இப்படி பிரபலமான மிருளாளினி தற்போது நகல் என்ற படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் நிறைய பட வாய்ப்புகளும் இவருக்கு வருகின்றதாம்.
இந்நிலையில்,தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இது மிருளாளினி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.