January 30, 2018
தண்டோரா குழு
கர்நாடக அரசிடம் காவிரி நீருக்காக பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக அரசிடம் காவிரி நீருக்காக பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதற்கு பதிலாக 4 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நிறுவலாம்” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.