January 30, 2018
மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினம் இன்று(ஜன 30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு,பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தியின் 71வது நினைவு நாளை ஒட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.