January 30, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு , இந்தியாவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை குடிமகனாகிய ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மனம் , வாக்கு செயல் என எந்த வகையிலும் தீண்டாமையை கடைப்பிடிக்க மாட்டேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும்,அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன் எனவும், படை , தேமல் , தோள் போன்ற நோய் பரவாமல் தடுப்பது குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.