January 30, 2018
tamilsamayam.com
நடிகர் அஜீத் இயக்குனர் சிவா படத்தை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜீத், தற்போது சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணி ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இணையவுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜீத்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என ஸ்டைலிஷ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். நடிகர் அஜீத் சிவா படத்தை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், எப்போது வேண்டுமானாலும் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.