January 29, 2018
தண்டோரா குழு
36 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜனவரி 31ஆம் தேதி மூன்று சந்திர நிகழ்வுகள் நடக்கவுள்ளது.
இந்த சந்திரகிரகண நாளன்று நிலவு எப்போதும் போல இல்லாமல் தன்னுடைய வட்டத்தில் இருந்து நகர்ந்து பூமிக்கு மிக அருகில் வந்து ,மிகப்பெரிதாக காட்சியளிக்கும்.
மாதத்திற்கு இரண்டு முறை பௌர்ணமி வந்தால் அதை ப்ளூ மூன் என்போம். அது போல இந்த மாதமும் இரண்டு பௌர்ணமி வருகிறது. அந்த இரண்டாம் பௌர்ணமியன்று தான் இந்த நிகழ்வு நடக்க உள்ளது .ஜனவரி 31 அன்று நிலவு வழக்கத்தை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சந்திரகிரகணத்தை ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,எந்த ஒரு கருவியின் துணை இல்லாமல் இதை வெறும் கண்ணிலேயே காணமுடியும். இந்த நிகழ்வை மேற்கு வட அமெரிக்கா ,ஆசியா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் மக்களும் காண இயலும் என்று கூறப்படுகிறது. கடைசியாக இந்த நிகழ்வு டிசம்பர் 30, 1982 அன்று நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.