January 29, 2018
தண்டோரா குழு
சத்தீஸ்கர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய் நேற்று (ஜன 28) காலமானார்.
சத்தீஸ்கர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய்(82), நீண்ட நாள் உடல்நல குறைவால்பாதிக்கப்படிருந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி,நேற்று இரவு காலமானார்.
கடந்த 1939ம் ஆண்டு பிறந்த சஹாய், தேசிய காவல்துறை சேவையில் சேர்ந்து தனது, பணியை தொடங்கினார். அதன்பிறகு, பீகார் மாநிலத்தின் துணை ஆணையாளராக உயர்ந்தார். தன்னுடைய பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2000ம் ஆண்டு, மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து பிரிந்துப்போன, சத்தீஸ்கர் மாநிலத்தின், முதல் ஆளுநராக பதிவியேற்றார். கடந்த 2013ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.