January 29, 2018
தண்டோரா குழு
உ .பி யில் 13வயதுடைய சிறுவன்,18 நாடுகளின் தேசிய கீதத்தை பாடுவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த13 வயது,சிறுவன் ருத்ரா பிரதாப் சிங். இச்சிறுவன் விடுமுறை நாட்களில், தொலைக்காட்சியில் வரும் விளையாட்டு போட்டிகளை பார்க்க அதிக விருப்பம் கொண்டவன். அந்த போட்டிகளில் இடம்பெறும் வெவ்வேறு நாடுகளின் தேசிய கீதத்தை சரியான முறையில் பாடி, தன்னுடன் சேர்ந்து போட்டிகளை பார்போரை ஆச்சரியப்படுத்தி உள்ளான்.
தற்போது சுமார் 18 நாடுகளின் தேசிய கீதத்தை கற்றுக்கொண்டு உள்ளான். மேலும், தன்னுடைய 21வது வயதிற்குள், சுமார் 100 நாடுகளின் தேசிய கீதத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டுள்ளான்.
மேலும், பிலிப்பைன்ஸ், ஜோர்டான், இஸ்ரேல், ஜப்பான், அமேரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தேசிய கீதம், சிறுவன் ருத்ராவுக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.