January 29, 2018
தண்டோரா குழு
“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பொங்கலன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளளர்.இப்படத்தில் இடம் பெற்றள்ள சொடக்கு பாடல் சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஆனது.
இதற்கிடையில், அரசியல்வாதிகளுக்கு எதிராக ”சொடக்கு” பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுக நிர்வாகி சதீஸ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது, ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் சொடக்கு பாடலில் உள்ள “அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற வரியை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தாக்கல் செய்ய அதிமுக நிர்வாகி சதீஸ்குமாருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.