January 27, 2018
தண்டோரா குழு
இஸ்ரேல் நாட்டு குகையில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த சபின் மனிதனின்மேல் தாடையின் இடது பகுதி பற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் தென் ஹைபாவில் உள்ள மேற்குகார்மல் மலை பகுதியில் 7.5 மைல் (12 கிமீ) தொலைவில் உள்ள மிச்லியா குகையில் ஆராய்ச்சியாளர்கள் 200,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சபியன் மனிதனின்மேல் தாடையின் இடது பகுதியை 7 பற்களுடன் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதர்கள் வசித்துவந்த அந்த குகையில் கத்தி, கூர்மையான கற்கள் மற்றும் விலங்குகளுடைய எலும்புகளும் அரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மேல் தாடையோடு கூடிய பற்களுக்கு சொந்தக்காரர் ஆணா? பெண்ணா? எனபது கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில் வியாழக்கிழமை நடந்த ஆய்வின்படி இந்த படிமம் கிட்டதட்ட 177,000 ஆண்டுகளில் இருந்து 194,000 ஆண்டுகள் பழமையாக இருக்கக் கூடும் என்றும் இந்த படிமத்துக்கு சொந்தமான சபியர்களுக்கும் ஆதிகாழ மனிதர்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுவரை ஆப்ரிக்காவிற்கு வெளியே குகையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு படிமங்களும் 90,000 ஆண்டுகள் மற்றும் 120,000ஆண்டுகள் பழமையானவை என்றும் அதில் ஒன்று கார்மல் மழைபகுதில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது கண்டெடுக்கப்பட்ட சபியானின் படிமம்தான் மிகவும் பழமையானது.
இதைவைத்து பார்க்கும்போது ஆப்பிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த மக்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரை என உலகின் வடபகுதிக்கு தான் குடி பெயர்ந்துள்ளனர் என்றும் பாப் அல் மந்தப் ஸ்ட்ரைட், சவூதி அரேபியாவின் தென் கடற்க்கரைக்கோ,இந்தியாவின் துனைகண்டங்களுக்கோ,அல்லது கிழக்கு ஆசிய கண்டங்களுக்கோ(அதாவது உலகத்தின் தென் பகுதிக்கு) சபியர்கள் இடம்பெயரவில்லை என்று ஆய்வு நடத்திய Tel Aviv University paleoanthropologist Israel Hershkovitz கூறியுள்ளது.
பழங்காலத்திலேயே ஆப்ரிக்காவை சேர்ந்த மக்கள் குடிபெயர்ந்தது ஆச்சிரியத்தை அழிக்கின்றதுஎன்று நியூயார்க்கில் உள்ளpaleoanthropologist Rolf Quam of Binghamton University யை சேர்ந்த துணை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.