January 27, 2018
தண்டோரா குழு
உத்தர் பிரதேஷின் குடியரசு தின விழாவில், அம்மாநிலத்தின் கல்வி அமைச்சர் 69வது குடியரசு தினம் என்று கூறுவதற்கு பதில் 59 குடியரசு தினம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் அலிகர் நகரில் உள்ள விதான் பவனில் நேற்று (ஜனவரி 26) குடியரசு தின கொண்டாட்டப்பட்டது. உத்தர் பிரதேஷ் ஆளுநர் ராம் நாயக், ராணுவம் மற்றும் மத்திய படை வீரர்களின் பிரமாதமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
உத்தர் பிரதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சரவை மந்திரிகள் மற்றும் மாநில அதிகாரிகள் அந்த விழாவில் கலந்து கொண்டனர் . மாநிலத்தின் வெவ்வேறு பள்ளிகளுடன் பல்வேறு அரசு துறைகள் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
அந்த விழாவில் கலந்துக்கொண்ட உரையாற்றிய கல்வி அமைச்சர், நாம் இந்தியாவின் 69வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்என்று கூறுவதற்கு பதில்,59வது குடியரசு தினம் என்று கூறியதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.