January 27, 2018
தண்டோரா குழு
புதுதில்லியில் சுமார் 163 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 1855ம் ஆண்டு, இங்கிலாந்தின் கிட்சன், தாம்ப்சன் அண்ட் ஹெவிட்சன் நிறுவனத்தால் பெர்ரி குயின் எக்ஸ்பிரஸ் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு, கொல்கத்தாவிற்கு கொண்டு வரப்பட்டடு மேற்கு வங்கம்-ஹவுரா இடைய இயக்கப்பட்டது.
சுமார் 54 ஆண்டுகள் இயங்கிய இந்த ரயில் உலகின் பழமையான நீராவி எஞ்சின் ரயில் ஆகும்.கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி மாதம், பெர்ரி குயின் ரயிலுக்கு தேசிய சுற்றுலா விருது வழங்கப்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு, உலகின் பழமையான நீராவி எஞ்சின் ரயில் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இந்நிலையில்,பெர்ரி குயின் எக்ஸ்பிரஸ் குடியரசு தினத்தில் இருந்து புதுடில்லி ரயில்நிலையத்தில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரயில் புதுடில்லி ரயில்நிலையத்திலிருந்து டெல்லி வரை இயக்கப்பட்டது.