January 26, 2018
தண்டோரா குழு
நாட்டின் 69 வது குடியரசு தின விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. சென்னை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றினார்.
பின்னர்,தமிழக திட்டங்களை அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில்,பள்ளிக்கல்வி துறை குறித்த அலங்கார ஊர்தி செல்லும் போது அதன் அருகில் ஒரு சிறுவன் தேசிய கொடியை விற்பது போன்ற புகைப்படத்தை ஒரு புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், அந்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் விவேக்,
இந்தப் படம் மனம் நெகிழச் செய்கிறது. எல்லோருக்கும் இலவசக்கல்வி; இலவச மருத்துவம்! வரும் நாளே,நாம் உண்மையான குடியரசு! If the youth decide , they can preside !! என்று பதிவிட்டுள்ளார்.