January 26, 2018
தண்டோரா குழு
மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் சென்னை அண்ணா சாலையில் இன்று திடீரென 10 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்,மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் ஆய்வுமேற்கொள்ள மயிலாப்பூர் வட்டாட்சியருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என மெட்ரோ ரயில் பொதுமேலாளர் அரவிந்த் ராய் தெரிவித்துள்ளார்.