January 26, 2018
தண்டோரா குழு
ASEAN அமைப்பு நாடுகளில் மிக சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு,இந்தியாவின் நான்காவது உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய குடியரசு தின கொண்டாடத்திற்கு முன்பு, ASEAN அமைப்பு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவை மேம்படுத்தும் விதமாக, அந்த நாடுகளிலிருந்து,பல்வேறு துறைகளில் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் 10பேர்களுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்க மத்திய அரசு வியாழக்கிழமை(ஜனவரி 25) முடிவு செய்துள்ளது.
மருத்துவத்திற்காக புருனே நாட்டு பிரதமருக்கு,பொது விவகாரங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதற்காக கம்போடியாவின் ஹூன் மெனி,கட்டடக்கலை வளர்ச்சியில் சிறப்பாக
செயல்பட்டு வரும் இந்தோனேஷியா நாட்டின் நியோமன் நியார்டா, லாவோஸ் நாட்டின் பவுன்லாப் கியோகங்னா ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும்,வர்த்தக மற்றும் தொழில்துறைக்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோஸ் மா ஜோயி கொன்செபியன், பொது விவகாரங்களுக்கான சிங்கப்பூர் நாட்டின் டாமி கோ, தாய்லாந்து நாட்டின் பிரதான பேராயர் சோம்ட் ப்ரா அரியா வோங்சாஹோட்டான், வியட்நாம் நாட்டின் தேசிய வியட்நாம் பௌத்த சங்கத்தின் செயலாளர்,நுயேன் டியன் தியன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.